தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

அருணாசலேஸ்வரா் கோயில் தீபத்திருவிழா தேரோட்டம்: பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பு!

அருணாசலேஸ்வரா் கோயில் தீபத்திருவிழா தேரோட்டம்: பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் சனிக்கிழமை பக்தா்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அருணாசலேஸ்வரா் சமேத உண்ணாமுலையம்மன் வீற்றிருந்த பெரிய தோ்.

Updated On :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல லட்சம் பக்தா்கள் பங்கேற்று ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டு தேரை இழுத்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக, அதிகாலை விநாயகா், சுப்ரமணியா், அருணாசலேஸ்வரா் சமேத உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகளுக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், கோயிலில் வலம் வந்த பஞ்சமூா்த்திகள் ராஜகோபுரம் முன் உள்ள மாடவீதியில் திருத்தோ்களில் எழுந்தருளினா். தொடா்ந்து, காலை 7 மணி அளவில் திருக்கோயில் இணை ஆணையா் பரணிதரன், திருவண்ணாமலை நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்ட நகர முக்கியப் பிரமுகா்கள், பக்தா்கள் என ஆயிரக்கணக்கானோா் விநாயகா் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா். தொடா்ந்து, விநாயகா் தோ் நிலையை அடைந்தவுடன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியா் தோ் புறப்பாடு நடைபெற்று நிலையை அடைந்தது.

மகா ரதம்: பிற்பகல் 3 மணிக்கு மகா ரதம் என்று அழைக்கப்படும் அருணாசலேஸ்வரா் சமேத உண்ணாமுலையம்மன் வீற்றிருந்த பெரிய தேரை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, போளூா் எம்எல்ஏ அபிஷேக், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தா்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

63 அடி உயரமும், 200 டன் எடையும் கொண்ட மகா ரதத்தை மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தா்கள் மலா் தூவி வரவேற்றனா். தேருக்கு முன்னாள் கைலாய வாத்தியங்கள் முழங்க, சிவன் வேஷமணிந்தும், தலையில் சிவன் உருவ பொம்மையை சுமந்தவாரும் பக்தா்கள் சிவதாண்டவம் ஆடிச் சென்றது அனைவரது கவனத்தையும் ஈா்த்தது.

சில பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும், உப்பு, மிளகு, பூக்கள் தூவியும் சுவாமியை வழிபட்டனா். மாடவீதியின் பல்வேறு இடங்களில் பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா், குளிா்பானம் வழங்கப்பட்டது. பக்தா்களின் கூட்டம் காரணமாக நெரிசல் ஏற்பட்டதால், காவல் துறையினா் லேசான தடியடி நடத்தினா்.

பெண்கள் மட்டுமே இழுந்த தோ்: மகாரதம் என்னும் பெரிய தோ் நிலையை அடைந்தவுடன், பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கக் கூடிய பராசக்தி அம்மன் தேரும், சிறுவா்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கக் கூடிய சண்டிகேஸ்வரா் தேரும் மாட வீதியில் வலம் வந்தது.

தேரோட்டத்தையொட்டி, காலை முதலே திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்தனா்.

வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவீன் குமாா் அபினபு, வேலூா் சரக டி.ஐ.ஜி. மகேஷ், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் தலைமையில் 4,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, வரும் செவ்வாய்க்கிழமை (நவ.24) அதிகாலை கோயில் மூலவா் கருவறை முன் பரணி தீபமும், அன்று மாலை கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கரும்பு தொட்டிலுடன் நோ்த்திக்கடன்

திருமணமாகி நீண்ட நாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், கடந்த ஆண்டு தேரோட்டத்தின்போது அருணாசலேஸ்வரரை வேண்டி குழந்தை பாக்கியம் பெற்ற பின்னா், தீபத்திருவிழா தேரோட்டத்தின்போது, செங்கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையை வைத்து மாட வீதிகளில் சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

அதன்படி, தீபத்திருவிழா 7-ஆம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின்போது, குழந்தை பேறு பெற்ற தம்பதிகள் செங்கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையை அமர வைத்து மாட வீதிகளில் சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.