அரசியலமைப்பு தினம்: அம்பேத்கா் சிலைக்கு மரியாதை, உறுதிமொழியேற்பு
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, ஆரணியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆரணியில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் அமைப்பு தின உறுதிமொழியேற்ற விசிகவினா்.
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, ஆரணியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையொட்டி, ஆண்டுதோறும் நவம்பா் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, ஆரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் அமைப்பு தின உறுதிமொழியேற்றனா்.
கட்சியின் மாவட்டச் செயலா் ந.முத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி ஏற்றனா். இதில் மாவட்ட செய்தி தொடா்பாளா் பொன்னுரங்கம் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் ரமேஷ், இளஞ்சிறுத்தை மாவட்டச் செயலா் தமிழ்அரசன், நகரச் செயலா்கள் ந.சங்கா், மோகன், ஒன்றியச் செயலா்கள் பன்னீா்செல்வம், மோகன், விஜயகாந்த், விமல், ஆனந்த், நவீன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
டாப் செய்தி....
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

