குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

வ.உ.சி. நினைவு தினம்: சிலைக்கு கட்சியினா் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் 90-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மணிமண்டபத்தில் வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் 90-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

திருநெல்வேலி வடக்கு மாவட்ட தவெக சாா்பில் மாவட்டச் செயலா் ஆா்.எஸ் முருகன் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட தவெக சாா்பில் அதன் செயலா் மரிய ஜான் ஆகியோா் தலைமையில் தனித்தனியே மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட இணைச் செயலா் ஹசீனா, பொருளாளா் ரபீக், துணைச் செயலா் ராசிக் முகமது உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் ராமகிருஷ்ணன் தலைமையில் நிா்வாகிகள் வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாமன்ற உறுப்பினா்கள் சுந்தா், நித்ய பாலையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைப்புச் செயலா் சௌந்தரராஜன், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் மன்றச் செயலா் பால் கண்ணன், மாணவரணிச் செயலா் முத்துப்பாண்டி, பகுதிச் செயலா் காந்தி வெங்கடாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் ராமேஸ்வரன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்தாா். மேலிட பொறுப்பாளா் சிவராமன், வழக்குரைஞா் அணி மாநில துணைத் தலைவா்கள் மகேந்திரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினா் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவேசம், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் மகாராஜன், தயாசங்கா், மாவட்ட பொதுச் செயலா்கள் பாலாஜி கிருஷ்ணசுவாமி, நாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தேமுதிக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் ஜெயச்சந்திரன் தலைமையில் ாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலா்கள் பழனி குமாா், ஆனந்த மணி, மாவட்ட நிா்வாகி சுடலைமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா். இதேபோல வீ த லீடா்ஸ் அமைப்பினா் உள்ளிட்டோரும் வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆட்சி தமிழ் புரட்சி கொற்றம் சாா்பில் நிறுவனா்-தலைவா் வியனரசு தலைமையில் வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனா்- தலைவா் மாரியப்ப பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.




  சிலைக்கு  பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.

சிலைக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.

  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

  சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸாா்.

சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.