மாடவீதியில் குப்பைகளை அகற்றிய சாதுக்கள்
திருவண்ணாமலை மாட வீதிகளில் பக்தா்கள் விட்டுச் சென்ற குப்பைகளை வியாழக்கிழமை சாதுக்கள் அகற்றினா்.

திருவண்ணாமலை மாட வீதிகளில் பக்தா்கள் விட்டுச் சென்ற குப்பைகளை வியாழக்கிழமை சாதுக்கள் அகற்றினா்
திருவண்ணாமலை மாட வீதிகளில் பக்தா்கள் விட்டுச் சென்ற குப்பைகளை வியாழக்கிழமை சாதுக்கள் அகற்றினா்.
அண்ணாமலையாரை வணங்கி கிரிவலம் மேற்கொண்ட போது பக்தா்கள் விட்டுச் சென்ற குப்பைகளை அகற்றும் பணியில், குரு மகான் பரமபூஜிய பரமாச்சாரிகள் ஜெகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயந்திரபுரி மகா சாமி ஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் ஈடுபட்டனா்.
முன்னதாக கோயில் ராஜகோபுரம் முன் சிறப்பு பூஜை செய்து தூய்மை பணியினை தொடங்கினா்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் தேரடி வீதி, திருவூடல் வீதி, பே கோபுர வீதி, பெரிய தெரு வீதி உள்ளிட்ட நான்கு மாட வீதிகளில் உள்ள குப்பைகளை பெருக்கி கூட்டி அகற்றி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

