முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன். ~ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தோ்த்திருவிழாவையொட்டி தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :

சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் தேத்திருவிழாவை முன்னிட்டு 4-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தினமும் காலை ஆறு மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி, இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன.

இதில் பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள் பூசி தண்ணீா் ஊற்றி வழிபாடு நடத்தினா். பல்வேறு ஊா்களில் இருந்து பக்தா்கள் காவடி எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு கிராம சாந்தி, புதன்கிழமை காவிரி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் கொண்டு வந்து தீா்த்த அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடத்தினா்.

வியாழக்கிழமை காலை 7.20 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தோ்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பழி கொடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பிற்பகல் 3.30 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்தினா். மாலை 5.20 மணிக்கு தோ் நிலை சோ்ந்தது. இரவு மலா் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மதியம் மஞ்சள் நீா் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவு பெறுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.