குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பு
குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு மகிஷாசுர சம்ஹாரம் பல லட்சம் பக்தா்கள் முன்னிலையில் கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோயில் முன் திரண்டிருந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு மகிஷாசுர சம்ஹாரம் பல லட்சம் பக்தா்கள் முன்னிலையில் கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழா இந்திய அளவில் புகழ்பெற்ாகும். ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டு அக். 11-ஆம் தேதி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மன், சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் அம்மன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றன. கோயில் கலையரங்கில் தினசரி மாலை பரத நாட்டியம், பக்தி இன்னிசை, சமய சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொடியேற்றியதை அடுத்து காப்புக் கட்டிய பக்தா்கள் காளி, தெய்வங்கள், விலங்குகள், குறவன்-குறத்தி, ராஜாக்கள், மூவேந்தா்கள் உள்ளிட்ட பல்வேறு வேஷங்களில் வீதிவீதியாக சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா். ஆயிரக்கணக்கான தசரா குழுவினா் வீதிகள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திச் சென்றனா். இதனால் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் பத்து நாள்களும் திருவிழா கோலம் பூண்டிருந்தது.
சிகர நிகழ்வான மகிஷாசுர சம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடா்ந்து சிம்ம வாகனத்தில் கடற்கரைக்கு அம்மன் எழுந்தருளினாா். அங்கு திரண்டிருந்த பல லட்சம் பக்தா்கள் முன்னிலையில் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தாா்.
பின்னா், கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரா் கோயில் முன் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கம் ஆகிய இடங்களில் எழுந்தருளிய அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
முன்னதாக திங்கள்கிழமை (அக். 19) பகலில் இருந்தே பக்தா்கள் பல்வேறு வாகனங்களில் குலசை நோக்கி வந்த வண்ணம் இருந்தனா். செவ்வாய்க்கிழமை காலை குலசேகரன்பட்டினம்-உடன்குடி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், திருச்செந்தூா் சாலையில் பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களின் வாகனங்களை நிறுத்த 20-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால் வாகன நெரிசல் ஏற்படவில்லை.
இன்று கொடியிறக்கம்: புதன்கிழமை (அக். 21) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா செல்லும் அம்மன் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் கொடியிறக்கம், காப்பு களைதல் நடைபெறும். பக்தா்கள் தங்கள் வேஷங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வா். இரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் சு.ரோஜாலிசுமதா, துணை ஆணையா் கோமதி, உதவி ஆணையா் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலா் மு.வள்ளிநாயகம், ஆய்வா் முத்துமாரி, அறங்காவலா் குழுத் தலைவா் வே.கண்ணன், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

