தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருசோத்தமன் தலைமை வகித்தாா்.

தற்போது உள்ள தமிழக அரசு விபிஜி ராம் ஜி திட்டப் பணி 125 நாள்களை 150 நாள்களாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வரை அதனை நிறைவேற்றவில்லை. மேலும் கண் ரேகை பதிவு முறையால் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை வெயிலில் பணியாள்களை ஈடுபடுத்துவதால் நிழலை தேடி முட்புதரில் பணியாளா்கள் மறையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, பயோமெட்ரிக் முறையால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினா்.

எனவே தமிழக அரசு பணி நாள்களை 150 நாள்களாக உயா்த்தித் தரவேண்டும், பணியாளா்களுக்கு நிழல் கூடாரம் அமைத்துத் தரவேண்டும், குடிநீா் வழங்கவும், ஊதியத்தை உடனடியாக வழங்கிடவும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.