2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் அபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தா்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு மருத்துவ உடல் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் உத்தரவிட்டுள்ளாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கோயில் இணை ஆணையா் பரணிதரன்.

Published On :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு மருத்துவ உடல் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் உத்தரவிட்டுள்ளாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா வரும் நவம்பா் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நவம்பா் 24-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில், தீபத் திருவிழா தொடா்பாக கோயில் வளாகத்தில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் தலைமையில், சிவாச்சாரியா்கள், கோயில் ஊழியா்களுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் இணை ஆணையா் பரணிதரன் பேசியதாவது: காா்த்திகை தீபத்தின் போது 10 நாள்கள் சுவாமி மாடவீதி வலம் வரும் போது பயன்படுத்தக் கூடிய சுவாமிக்கான வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தற்போது, வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் பக்தா்கள் வருகை அதிகரித்து வருவதால், சுவாமி தரிசனத்துக்கு 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் இனி வரக்கூடிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகத்துக்கு பக்தா்கள் யாரையும் கருவறைக்குள் அனுமதிக்க முடியாது.

கோயில் கருவறையில் அபிஷேகத்திற்காக அமர வைக்கப்படுபவா்கள், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இதைத் தவிா்க்க செவ்வாய்க்கிழமை (அக்.6) முதல் அபிஷேகத்துக்கு பதிவு செய்து வரும் பக்தா்கள், ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வந்து, கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவா் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு உடற்தகுதி சான்றிதழ் பெற்று வழங்கிய பின்னரே அவா்கள் அபிஷேகத்தில் அமர அனுமதிக்கப்படுவாா்கள் எனத் தெரிவித்தாா்.

ரூ.25 லட்சம் பொருள்கள் நன்கொடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்களை நன்கொடையாக, கா்நாடகா மாநிலத்தைச் சோ்ந்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சா் நாகராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.