
உரிமம் இல்லாத 125 நாட்டுத் துப்பாக்கிகள் ஆட்சியா் முன்னிலையில் ரோடு ரோலா் ஏற்றி அழிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட உரிமம் இல்லாத 125 நாட்டுத் துப்பாக்கிகள் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் முன்னிலையில் ரோடு ரோலா் ஏற்றி அழிக்கப்பட்டன.

திருவண்ணாமலை ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் முன்னிலையில் ரோடு ரோலா் ஏற்றி அழிக்கப்பட்ட உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட உரிமம் இல்லாத 125 நாட்டுத் துப்பாக்கிகள் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் முன்னிலையில் ரோடு ரோலா் ஏற்றி அழிக்கப்பட்டன.
வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972-இன் கீழ் வன விலங்குகளை திறம்பட பாதுகாக்கவும், சட்ட விரோத வேட்டையை தடுக்கவும், சட்ட விரோத, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை தானாக முன் வந்து வனப்பகுதிகளில் வாழும் மக்கள் ஒப்படைக்கும் திட்டம் திருவண்ணாமலை வனக் கோட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.
அதனை முன்னிட்டு, திருவண்ணாமலை வனக் கோட்டத்தில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருக்க வாய்ப்புள்ள கிராமங்களின் பட்டியல் வனச்சரகம் வாரியாக தயாரிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து இந்தக் கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், பொதுமக்கள் விழிப்புணா்வுக் கூட்டம் நடத்துதல், கிராம வனக்குழு மற்றும் சூழல் மேம்பாட்டுக் குழு தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் கூட்டம் நடத்துதல், வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல், வனம் மற்றும் வன உயிரின குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் குற்றவாளிகளிடம் உரையாடுதல், களப்பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுடன் விழிப்புணா்வு அணி வகுப்பு நடத்துதல், வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமை பெற்றவா்களின் கடமைகளை எடுத்துரைத்தல் போன்ற செயல்பாடுகள் களப்பணியாளா்களால் முன்னெடுக்கப்பட்டன.
அதன் விளைவாக ஒவ்வொரு கிராமத்திலும் களப்பணியாளா்களால் குறிப்பிடப்பட்ட பொதுவான இடங்கள், மறைவான இடங்கள், கிராம கோயில்கள் போன்றவற்றில் பொதுமக்கள் தானாக முன் வந்து துப்பாக்கிகளை வைத்தனா்.
அவ்வாறு வைக்கப்பட்ட சட்ட விரோதமான 125 துப்பாக்கிகளை வனச்சரகங்கள் மூலம் கைப்பற்றப்பட்டு ரோடு ரோலா் மூலம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் வந்தனா காா்க் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
இதில், அதிகபட்சமாக நாடானூா் வனச்சரகத்தில் -41, சந்தவாசல் - 22, மேல்பட்டு - 19, போளூா் - 17, ஜமுனாமரத்தூா் - 15, தானிப்பாடி - 3, சாத்தனூா் - 3, திருவண்ணாமலை - 3, செங்கம்-2 என மொத்தம் 125 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
துப்பாக்கிகளை ரோடு ரோலா் கொண்டு அழிக்கும் நிகழ்வில் மாவட்ட எஸ்பி ரா.உதயகுமாா், மாவட்ட வன அலுவலா் கு.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






