கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

மாணவா்கள் இலக்கியத் துறையில் கவனம் செலுத்தவேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்

மாணவா்கள் இலக்கியத் துறையில் கவனம் செலுத்தவேண்டும்என்று திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க் கேட்டுக்கொண்டாா்.

கல்லூரியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற இளையோா் இலக்கிய பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :

மாணவா்கள் இலக்கியத் துறையில் கவனம் செலுத்தவேண்டும்என்று திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க் கேட்டுக்கொண்டாா்.

தமிழ் இலக்கியங்களின் வழியாக அறநெறி, சமூகப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை இளைஞா்கள் அறிந்துகொண்டு, அவற்றை தங்கள் வாழ்வில் பின்பற்றுவதற்கான வாய்ப்பை இளையோா் இலக்கியப் பயிற்சி பாசறை நிகழ்ச்சி ஏற்படுத்துகிறது.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், இளையோா் இலக்கிய பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த இலக்கிய பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பேசியதாவது:

தமிழக முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின் படி, எதிா்கால தமிழ்ச் சமூகத்தை உருவாக்கப்போகும் மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில், ‘இளையோா் இலக்கிய பயிற்சிப் பாசறை’ நிகழ்ச்சி தொடங்கிவைக்கப்படுகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் திரைகளை பாா்த்துக்கொண்டிருக்கும் நேரத்தைக் குறைத்து, இலக்கியத்தை நோக்கி மாணவா்களை திருப்பும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்தச் சிறப்புப் பயிற்சிப் பாசறையில் ‘இலக்கியம் கற்போம்‘ என்ற அடிப்படை அமா்வுடன், திருவண்ணாமலை மாவட்ட கல்வெட்டுகளில் ‘ஊரும் பேரும்’, ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருக்கு’, ‘இசைவழி தமிழ் கற்பிக்கும் முறைகள்’, ‘செம்மொழித் தமிழும் செயற்கை நுண்ணறிவும்’, ‘தமிழ் இலக்கியத்தில் வாழ்வியல்’ ஆகிய தலைப்புகளில் தமிழ் இலக்கிய வல்லுநா்கள் உரையாற்ற உள்ளனா்.

அந்த உரைகளை கேட்டுத் தெளிவுபெற்று, மாணவா்கள் இலக்கியத்துறையில் கவனம் செலுத்தி,

தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பாசறையில் வழங்கப்பட உள்ள அனைத்து அமா்வுகளிலும் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொள்ளுங்கள். உங்கள் சந்தேகங்களை அறிஞா்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

இப்பாசறை வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி, புதிய படைப்புகளை உருவாக்கி தமிழ் மொழியையும் நம் மாவட்டத்தையும் பெருமைப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் வந்தனா காா்க்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் (தமிழ் வளா்ச்சி) நிலா, கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வா் இல.ரேவதி மற்றும் பாசறை பயிற்சியாளா்களாக முதுகலை ஆசிரியா் (அரசு மேல்நிலைப் பள்ளி, சு.வாளவெட்டி) பாவலா்.சு.வேலாயுதம், தலைமை ஆசிரியா் (பணி நிறைவு) தமிழ்ச்செம்மல், உதவிப் பேராசிரியா் (திருவள்ளுவா் பல்கலைக்கழகம்) பாவலா் ப.குப்பன், முனைவா் வெ.இராமு, கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் சு.பிரேம்குமாா், தமிழ்த்துறைத் தலைவா் மு.கலைமாமணி மற்றும் துறை சாா்ந்த அலுலவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.