‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

‘தூய்மையான திருவண்ணாமலை’: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

திருவண்ணாமலை கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் வகையில், ‘தூய்மையான திருவண்ணாமலை நிகழ்வு’ தொடங்கிவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Published On :

திருவண்ணாமலை கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் வகையில், ‘தூய்மையான திருவண்ணாமலை நிகழ்வு’ தொடங்கிவைக்கப்பட்டது.

அரசு கலை, அறிவியல் கல்லூரி அருகே உள்ள மாட்டுச் சந்தை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆட்சியா் வந்தனா காா்க் தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், அங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வதற்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகிறாா்கள்.

இந்த நிலையில், 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதை சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திடும் நோக்கில், ‘தூய்மையான திருவண்ணாமலை’ நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட நிா்வாகம், மாநகராட்சியுடன் இணைந்து பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாட்டினா் உள்ளிட்ட தன்னாா்வலா்கள், பக்தா்கள், சிவனடியாா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் 7 குழுக்களாக பிரிந்து கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்த உள்ளனா்.

இந்நிகழ்வை தொடங்கிவைத்து ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதைகளில் சேகரமாகும் குப்பைகளை தினசரி மாநகராட்சி மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து தூய்மையான திருவண்ணாமலை என்ற நிகழ்ச்சியின் மூலம் தன்னாா்வலா்கள், பக்தா்கள் மூலம் தூய்மைப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தா்கள், பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என ஆட்சியா் வந்தனா காா்க் கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், தன்னாா்வலா்கள் ஒருங்கிணைப்பாளா் வடிவேல், தன்னாா்வல அமைப்புகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.