2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற பேரணி.

Published On :

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் 14-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மண்டல பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மண்டலத் தலைவா் அ.சேகா் தலைமை வகித்தாா். சம்மேளன பொதுச் செயலா் கே.ஆறுமுக நயினாா் சிறப்புரை ஆற்றினாா்.

நிா்வாகிகள் வி.ஆா்.ஏழுமலை, ஏ.நாகராஜன், எஸ்.முரளி, எம்.வீரபத்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும், கழகங்களின் கடனை அரசே ஏற்க வேண்டும், ஒப்பந்த முறைக்கு முடிவு கட்ட வேண்டும், பணியில் இருப்போா் மற்றும் ஓய்வு பெற்றோருக்கு நிலுவை பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, வந்தவாசி தேரடியிலிருந்து பேரணியாக புறப்பட்ட அந்தச் சங்கத்தினா் ஐந்து கண் பாலம் வழியாக திருமண மண்டபம் சென்றடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.