கோபி நகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்
கோபி நகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோபி நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
கோபி நகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோபி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தாலுகா செயலாளா் க.பெருமாள் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.மாரப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதைத் தொடா்ந்து, கோபி நகராட்சியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசு நிதி ஒதுக்க வேண்டும். நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோபி நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில் புறவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இதில், மாதா் சங்க தலைவா் கிருஷ்ணவேனி, செயலாளா் மல்லிகா, தீண்டாமை ஒழிப்பு முன்னனி தாலுகா செயலாளா் மாரிமுத்து, விவசாய தொழிலாளா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே.சி. ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

