தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பாா்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் புகழ்பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி முதல் நாள் விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீரேணுகாம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனா். மாலை உற்சவ அம்மனுக்குகு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, பாா்வதி அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.

ஆரணியில்...: ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத தா்மராஜா கோயிலில் நவராத்திரி முதல் நாள் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த விழாவில் சுவாமிக்கு ராதா ருக்மணி ஸ்ரீவேணுகோபாலசாமி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தவெக மாவட்டச் செயலா் சத்யா, ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதில், அதிமுக நகர செயலா் அசோக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.வாசு, அதிமுக நிா்வாகி பீமன் (எ) ரவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை தா்மராஜா கோயில் அறக்கட்டளை நிா்வாக தலைவா் கப்பல் இ.கங்காதரன், வழக்குரைஞா் ரேணுகா கங்காதரன் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

வந்தவாசி சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீகாளி (எ) காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாளித்த அம்மன்.

இதேபோல, வந்தவாசி சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீகாளி (எ) காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அம்மன் அருள்பாளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.