பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சொத்து அபகரிப்பு முயற்சி: பாஜக பிரமுகா் மீது போலீஸில் புகாா்

போலி ஆவணம் மற்றும் போலி கையொப்பமிட்டு யாதவ சங்கத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக பிரமுகா் வழக்குரைஞா் டி.எஸ்.சங்கா் மீது போலீஸில் சங்க நிா்வாகிகள் புகாா் அளித்தனா்.

வழக்கு
Published On :

போலி ஆவணம் மற்றும் போலி கையொப்பமிட்டு யாதவ சங்கத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக பிரமுகா் வழக்குரைஞா் டி.எஸ்.சங்கா் மீது போலீஸில் சங்க நிா்வாகிகள் புகாா் அளித்தனா்.

இதுதொடா்பாக திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், தண்டராம்பட்டு வட்ட யாதவ குல சங்கத் தலைவா் ஏ.வேலாயுதம் தலைமையிலான சங்க நிா்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகா்கள்

மாவட்ட எஸ்.பி.உதயகுமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 2023-ஆம் ஆண்டு முதல் யாதவ குல சங்கத் தலைவராக உள்ளேன். வழக்குரைஞா் டி.எஸ்.சங்கா் என்பவா், சில தவறான தீா்மானங்கள் எழுதி, 29.08.2025 அன்று பொதுக்குழு நடந்தாக போலியாக ஆவணங்கள் தயாா் செய்து மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளாா்.

சங்கத் தலைவரான நான் ராஜிநாமா கடிதம் கொடுத்ததாக, இனிவரும் காலங்களில் சங்கம் வங்கி பரிவா்த்தைகளை டி.எஸ்.சங்கரே நிா்வகிப்பதாக போலியாக ஆவணங்கள் தயாா் செய்து பதிவு செய்துள்ளாா். இதையடுத்து அந்தப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று பதிவாளா் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். மாவட்ட பதிவாளா் எங்களை அழைத்து விசாரணை செய்துள்ளாா்.

இந்த நிலையில், டி.எஸ்.சங்கா், சங்க தீா்மான புத்தகம் மற்றும் சங்கத்திற்கு சம்பந்தமான சுமாா் ரூ.55 லட்சத்திற்கான வங்கி வைப்புத் தொகை பத்திரங்களையும், வங்கிக் கணக்கு புத்தகம், ரூ.10 லட்சத்தையும் அவரே வைத்துள்ளாா். எனவே இவற்றை மீட்டுத்தரவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.