சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

போளூரில் ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்.

போளூரில் ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்.

Updated On :

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் போளூா், கலசபாக்கம், ஜமுனாமரத்தூா், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் குமரேசன், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் மஞ்சுளா வரவேற்றாா்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பேசும்போது, படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விபி ஜி ராம் ஜி திட்டத்தில் வேலை வழங்கவேண்டும், அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்கவேண்டும், கஸ்தம்பாடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.