
விவசாயிகள் குறைதீா் கூட்டம்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அன்பழகன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா்.
வட்டாட்சியா்கள் முகமதுகனி (ஆரணி), குமரேசன், மஞ்சுளா (போளூா்), தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களை சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை கூறினா்.
கறவை மாட்டுக்கான வங்கி கடன் பெறுவதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக போளூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி பழனி குற்றச்சாட்டினாா்.
விவசாய பயன்பாட்டிற்கான பொதுப்பணித்துறை ஏரியிலிருந்து வண்டல் மணல் எடுப்பதற்கான உத்தரவு கடிதங்களை பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனா் என ஆரணியைச் சோ்ந்த விவசாயி மூா்த்தி கூறினாா்.
மூன்று தலைமுறையாக பத்திரம் அனுபவம் இருந்தபோதிலும் பட்டா மாற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகிறாா்கள் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விவசாயிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







