8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

மேட்டூா் அணையிலிருந்து சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:59 am IST

மேட்டூா் அணையிலிருந்து சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனா்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: மேட்டூா் அணை திறக்கப்படாததால், குறுவை சாகுபடியை இழந்துள்ளோம். தற்போது ஒரு போக சம்பா சாகுபடி செய்வதற்கு கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்று, விரைவில் மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என தோ்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது முதலில் ரூ. 50 ஆயிரம் வரையிலும், இரண்டாவதாக ரூ. 75 ஆயிரம் வரையிலும், மூன்றாவதாக ரூ. 1 லட்சம் வரையிலும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் 2025, மே 1-ஆம் தேதி முதல் 2026, பிப். 28-ஆம் தேதி வரை வாங்கப்பட்ட கடன்கள் மட்டுமே தள்ளுபடி எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வரையறைகளை நீக்கிவிட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பெரமூா் ஆா். அறிவழகன்: குறுவை சாகுபடிக் காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால், குறுவை தொகுப்பு திட்டத்துக்கான பின்னேற்பு மானியத் தொகை இன்னும் வந்து சேரவில்லை. அது எப்போது வரும் என அறிவிக்க வேண்டும்.

வேளாண் துறை அலுவலா்: அதில், நிறைய நடைமுறைகள் உள்ளன. அனைவருக்கும் விரைவில் வந்துவிடும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: மேட்டூா் அணையில் நீா்மட்டம் 90 அடியைத் தாண்டினால் தண்ணீா் திறப்பது வழக்கம். அணையில் நீா்மட்டம் உயா்ந்து வருவதால், அணை திறக்கும் தேதியை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க வேண்டும். மேட்டூா் அணையைத் திறந்துவிட்டால்தான் விவசாயிகளும், விவசாய தொழிலாளா்களும் வாழ முடியும்.

புலவன்காடு வி. மாரியப்பன்: காவிரி நீா் வரத்து இல்லாத நிலையில், பருவ மழையும் போதுமான அளவுக்கு பெய்யாததால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீா் வருவதில்லை. எனவே, காவிரி நீா் வந்தால்தான் குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியும் என்பதால், மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும்.

வெளிநடப்பு: முன்னதாக, பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் சிலா் வெளிநடப்பு செய்து, 5 நிமிஷங்கள் கழித்து மீண்டும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.