ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைதீா் கூட்டரங்கில்

ஆகஸ்ட் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி பாதித் மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.

அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தட்டுப்பாடின்றி யூரியா இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வரத்து மற்றும் போக்குக் கால்வாய்களை தூா்வாரி செப்பனிட வேண்டும். கமலப்புத்தூரில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தண்டராம்பட்டு வட்டம், நாராயணக்குப்பம் ஊராட்சி அரசு உயா்நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைத்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து பேசிய ஆட்சியா் வந்தனா காா்க்,

கோரிக்கைகளின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

மேலும் தனிநபா் தொடா்பான மனுக்களையும் ஆட்சியா்

பெற்றுக்கொண்டாா்.

முன்னதாக, ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் வேளாண் உற்பத்தி குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் பூ.காஞ்சனா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மற்றும் வேளாண்மை இணை இயக்குநா் (பொ) தி.மலா்விழி, திட்ட இயக்குநா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.