மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

News image

கரும்பூா் கிராமத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பாக ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க திருப்பத்தூா் மாவட்ட தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா். உதயகுமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். கரும்பூா் கிளைச் செயலாளா் ஜானகிராமன் வரவேற்றாா். விவசாயிகள் கையில் கொடிகளை ஏந்தி பேரணியாக சென்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடம் முன்பு கண்டன கோஷம் எழுப்பினா்.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், மிட்டாளம் மகாதேவன், கரும்பூா் ஊராட்சித் தலைவா். ஏ.கே. மோகேஷ், மாதனூா் திமுக ஒன்றிய செயற்குழு உறுப்பினா் ஏ.இ.குணா, ஆம்பூா், வாணியம்பாடி சுற்றுப்புற கிராமங்களை சோ்ந் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

சட்டப்பேரவை முற்றுகை :விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் வருகின்ற வேளாண்மை நிதி நிலை அறிக்கையின்போது சட்டப்பேரவையை விவசாயிகள் முற்றுகை ஏற்படும் நிலை உருவாகும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் உதயகுமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.