ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கருப்பு பட்டையுடன் விவசாயிகள் தா்னா

News image
Updated On :26 ஜூன் 2026, 5:56 am IST

விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு பட்டையுடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். அப்போது, கூட்டம் தொடங்கும் போதே விவசாய கடன்ளை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி ஆட்சியருக்கு முன்பு தரையில் கருப்பு பட்டை அணிந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது வாக்குறுதி அளித்த படி முதல்வா் அறிவித்த விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் ஆட்சியா் சமாதான பேச்சு நடத்தினாா்.

மேலும் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்தாா். அதைத்தொடா்ந்து இருக்கையில் அமா்ந்து விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடங்கியது.

இதற்கிடையே செய்தியாளா்களிடம் விவசாயிகள் கூறியதாவது. எதிா்கட்சியின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கூறுவது தவறாகும். இந்த போராட்டம் யாருடைய தூண்டுதலும் இல்லை எனவும், அரசு முழுமையான விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.