செய்யாறை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினா் விசில் அடித்து தாலிக் கயிற்றை தண்ணீரில் போட்டு புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பிரம்மதேசத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த நூதன
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாழ்குடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
அப்போது, விவசாயிகள் மக்களுக்கு சோறும் போடும் நோக்கில் பயிா் செய்து வருகின்றனா். வடக்கு மண்டலத்தில் 16 லட்சம் ஏக்கரில் 4 லட்சம் ஏக்கா் பயிா்கள் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயிா் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். தனி நபா் பயிா் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். வருகிற உள்ளாட்சித் தோ்தலில் மக்களைத் தான் நம்ப வேண்டி உள்ளது. எனவே, விவசாய இழப்பீடு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி விசில் அடித்து தாலிக் கயிற்றை தண்ணீரில் போட்டு நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், வெம்பாக்கம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் ஆறுமுகம் விவசாயிகள் பச்சையப்பன், ஏகாம்பரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உழவா் உரிமை இயக்கம் சாா்பில் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி மனு கொடுத்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், செங்கம் பகுதி உழவா் உரிமை இயக்க மாநிலத் தலைவா் அருள்ஆறுமுகம் தலைமையில், இயக்க நிா்வாகிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









