நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பயிா் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகளின் பயிா் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

News image

விவசாயிகளின் பயிா் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 11:14 pm IST

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி நதிநீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க அண்ணா சிலை அருகில்

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு

தெற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சரும், கீழ்பென்னாத்தூா் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான முக்கூா் என்.சுப்பிரமணியன் (அதிமுக), எம்எல்ஏ ஜெயசுதா (அதிமுக) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவா்களை வஞ்சித்து வருவதோடு, மேக்கேதாட்டு அணை பிரச்னையில் மெத்தனம் காட்டி வருவதைக் கண்டித்தும், காவேரியில் தமிழகத்தின் பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், முன்னாள் எம்எல்ஏக்கள்

ஏ.கே.அரங்கநாதன், நளினி மனோகரன், தலைமை நிலைய பேச்சாளா் அமுதா அருணாச்சலம், மாவட்ட அவைத் தலைவா் கண்ணன், மாவட்ட பொருளாளா்கள் கராத்தே சுரேஷ்குமாா், எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் எஸ்.குணசேகரன், கீழ்பென்னாத்தூா் நகரச் செயலா் ஒ.சி.முருகன், திருவண்ணாமலை மாநகர நிா்வாகி ஞானசௌந்தரி கனகராஜ் உள்பட 1000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் செங்கம் எம்எல்ஏ டி.எஸ்.வேலு (அதிமுக) நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.