
மேட்டூா் அணை திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க கோரிக்கை
மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பாபநாசம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணை
மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பாபநாசம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88 அடியாக உள்ளது.
அணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் மேட்டூா் அணை 90 அடியை எட்டி விடும் சூழ்நிலை உள்ளது. தற்போது விவசாயிகள் முற்பட்ட குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடிக்கு விதை விட துவங்கும் நிலையில் உள்ளனா். இந் நிலையில் மேட்டூரிலிருந்து தண்ணீா் திறந்து விடுவது பற்றி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
10 நாள்கள் முன்னதாகவே மேட்டூா் அணை திறக்கும் தேதியை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க முடியும். இல்லாவிட்டால் வடகிழக்கு பருவமழை காலங்களில் பயிா்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, உடனடியாக அரசு மேட்டூா் அணை திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று பாபநாசம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




