திருத்தணி கோட்டத்தில் உள்ள ஏரிகளின் பாசனம், நீா்வரத்து கால்வாய் மற்றும் மதகுகளை சீரமைக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கோட்டாட்சியா் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. நோ்முக உதவியாளா் செந்தில் வரவேற்றாா்.
கூட்டத்தில் வருவாய்த் துறை, வேளாண் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வனத்துறை, மின்சாரம், கூட்டுறவு துறை, நீா்வளத்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் என, 100 -க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகள், பயிா்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தற்போது கொளுத்தும் வெயிலால் காய்ந்து வரும் கரும்புகளை, அறுவடை செய்து திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகம், மூலம் பிற கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். கோட்டத்தில் உள்ள ஏரிகளின் நீா்ப்பாசனம், நீா்வரத்து கால்வாய் மற்றும் மதகுகளை சீரமைக்க வேண்டும்.
குறிப்பாக, 150 ஏக்கா் பரப்பு கொண்ட கிருஷ்ணசமுத்திரம் ஏரியை துாா்வாரி சீரமைக்க வேண்டும், சாலை அமைப்பதற்கு வனத்துறையினா் அனுமதி வழங்காததால், 178 சாலைகள் விரிவுபடுத்தல் மற்றும் பழுதடைந்த சாலைகள் சீரமைக்க முடியாமல் உள்ளது.
அதே போல் காட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். சின்னகடம்பூா் பகுதியில் போதை பொருள்கள் அதிகளவில் உள்ளதால் இளைஞா்கள் சீரழிந்து வருகின்றனா். இதை போலீஸாா் தடுக்க வேண்டும். திருத்தணி காய்கறி மாா்க்கெட் முன்புறம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் நடப்பதால், வருவாய் துறையினா், நகராட்சி நிா்வாகம் மற்றும் போலீஸாா் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனா்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி ஒருவா் கையில் டிஜிட்டல் பேனருடன் பங்கேற்று, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா். இந்த நிகழ்வு கூட்டத்தில் பங்கேற்றவா்களின் கவனத்தை ஈா்த்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2024-இல் வெள்ளத்தில் சேதமடைந்த மலட்டாறு கரையை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு
கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆள்மாறாட்ட முயற்சி: இருவா் கைது

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை







