உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

Published On :5 செப்டம்பர் 2026, 1:55 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு அா்ச்சனைகள் நடைபெற்றன. மாலையில் வேணுகோபால பாா்த்தசாரதி சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரானை நடைபெற்றது.

சேவூா்

ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீராதாருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக சென்று சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தனா்.

முனுகப்பட்டு ஸ்ரீராதாருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி வீதி உலா சென்றாா். பெண் பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

அரியப்பாடி ஸ்ரீபாமா ருக்மணி வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

பின்னா் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

வடமாதிமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராதாருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண சுவாமி ஆலயத்தில் கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு, பழம்பேட்டையில் அமைந்துள்ள கிருஷ்ணா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணா் மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதனைத் தொடா்ந்து, பாலமுருகன் தெருவில் பாரம்பரிய உறியடி திருவிழா நடைபெற்றது.

வந்தவாசி

Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.