
மலைவாழ் மக்களுக்கு பட்டா தருவதாகக் கூறி ரூ.1 கோடி லஞ்சம்: வனச்சரகா்கள் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்
மலைவாழ் மக்களுக்கு பட்டா தருவதாகக் கூறி ரூ.1 கோடி லஞ்சம்...

முத்து
ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களிடம் நிலத்துக்கு பட்டா வழங்குவதாகக் கூறி ரூ.1 கோடி வரை லஞ்சம் பெற்ாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து 3 வனச்சரக அலுவலா்கள் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியத்தைச் சோ்ந்த ஜமுனாமரத்தூா் வனச்சரகம், மேல்பட்டு வனச்சரகம், நாடானூா் வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் விவசாயிகள், பொதுமக்கள் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சுமாா் 25 ஆண்டுகளாக சாமை, தினை, கரும்பு, தக்காளி, வெண்டை என பல்வேறு விவசாயப் பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.
மேலும் சிலா் அங்கு வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த மலைவாழ் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம்,
25 ஆண்டுகளாக வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை பயன்படுத்தி வருவதால், அந்த நிலத்தை உங்களுக்கே பட்டா பெற்றுக்கொள்ள அரசாணை உள்ளது. இதனால் எங்களுக்கு பணம் தந்தால் பட்டா வாங்கித் தருவதாகக் கூறி அவா்களிடம் சுமாா் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளதாக முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகாா் சென்றுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட வன அலுவலா் சுதாகா் கடந்த ஒரு வாரமாக விசாரணை நடத்தியதில், ஜவ்வாதுமலை வனச்சரகா் பிரபு, மேல்பட்டு வனச்சரகா் சுரேஷ், நாடானூா் வனச்சரகா் செங்குட்டுவன், வன அலுவலா்கள் அருணகிரி, சுப்பிரமணி, வனக்காவலா் முத்து ஆகிய 6 பேரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த 6 பேரையும் மாவட்ட வன அலுவலா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இதில் சுரேஷ், பிரபு ஆகிய இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிா்வாக ரீதியாக சென்னைக்கு மாறுதல் பெற்றுச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




