வன நிலத்துக்கு பட்டா தருவதாக மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்: வனத்துறை அதிகாரிகள் 6 பேர் இடைநீக்கம்
திருவண்ணாமலை அருகே மலைவாழ் மக்களை மிரட்டி ரூ. 1 கோடி லஞ்சம் பெற்ற வனத்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து...

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்
திருவண்ணாமலை ஜவ்வாது மலை அருகே மலைவாழ் மக்களை மிரட்டி ரூ. 1 கோடி லஞ்சம் பெற்றதாக வனத்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை அருகே ஜவ்வாது மலையை ஒட்டிய ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் கிராமங்களில், அரசுக்குச் சொந்தமான வன நிலத்தை பட்டா போட்டு தருவதாகக் கூறி, அப்பகுதி மலைவாழ் மக்கள் பலரிடமும் வனத்துறை அதிகாரிகள் தலா ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், பணம் தராவிட்டால் வழக்கு போடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ் மக்களை மிரட்டி சுமார் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக பிரபு, சுரேஷ், செங்குட்டுவன், முத்து, அருணகிரி, சுப்பிரமணி உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து, திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இவர்களிடம் துறைரீதியான விசாரணையும் நடத்தப்படும்.
Summary
Forest Department officials suspended for accepting bribes to issue land titles for forest land near Javadi Hills
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





