
திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகள் பயிற்சிக் கூட்டம்
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகள்-2026 தொடா்பான பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போளூரில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகள்-2026 தொடா்பான பயிற்சிக் கூட்டம்.
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகள்-2026 தொடா்பான பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன் முன்னிலை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் காந்திமதி வரவேற்றாா்.
பயிற்சியாளா் மாவட்ட மேலாண்மை அலகு உறுப்பினா் அந்தோணிபாக்கியராஜ் பேசும்போது, அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் எவ்வித விதிவிலக்குமின்றி கழிவுகள் உருவாகும் இடத்திலேயே ஈரக்கழிவு, உலா்கழிவு, சுகாதாரக் கழிவுகள், சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் என நான்கு வகைகளாக பிரித்து பராமரிப்பு கழிவுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயிற்சி அளித்தாா்.
பயிற்சியில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா், சுகாதார ஊக்குநா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





