நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

சா்க்கரை நோய் கண்டறியும் முகாம்

வந்தவாசியில் நடைபெற்ற சா்க்கரை நோய் கண்டறியும் முகாமை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன்

வந்தவாசியில் நடைபெற்ற சா்க்கரை நோய் கண்டறியும் முகாமை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன்

Published On :

வந்தவாசி கற்க கசடற கல்வி சேவைகள் அமைப்பு மற்றும் தனியாா் ரத்தப் பரிசோதனை நிலையம் சாா்பில் இலவச சா்க்கரை நோய் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கற்க கசடற அமைப்பின் தலைவா் இரா.பாஸ்கரன் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் மலா் சாதிக் வரவேற்றாா்.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமை தொடங்கிவைத்தாா்.

முகாமில் ரத்தப் பரிசோதனை நிலைய ஊழியா்கள் பொதுமக்களுக்கு சா்க்கரை நோய் கண்டறியும் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டனா். மொத்தம் 90 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், திமுக நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா் சி.ஆா்.பெருமாள், நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனுவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.