தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

இதய பரிசோதனைக்காக 40 வயது வரை காத்திருக்க வேண்டாம்!

இதய நோய் மற்றும் அதுசார்ந்த பரிசோதனை தொடர்பாக மருத்துவரின் கேள்விகளும் பதில்களும்...

heart attack: waiting until 40 to get screened is too late

கோப்புப் படம் - ENS

Published On :

- உண்ணிகிருஷ்ணன் எஸ்

இந்தியாவில் இளம் வயதினருக்கு இதய நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உடலில் கொழுப்பு ஏன் அதிகரிக்கிறது, யாருக்கு சிகிச்சை தேவை? என அதுகுறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளன. ஆனால் அந்த மாற்றத்தைக் கொண்டுவர அனைத்து பகுதிகளிலும் தேவையான சோதனை மையங்கள் வேண்டும் என்று திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இதயவியல் துறைப் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் எஸ். ஹரிகிருஷ்ணன் கூறுகிறார்.

இதுதொடர்பாக மருத்துவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...

ஸ்டேடின் மருந்துகளை எப்போது தொடங்க வேண்டும்? வயது ஒரு காரணியா?

ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ஸ்டேடின் (statin) மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு வயது ஒரு காரணி அல்ல. ஆபத்துக் காரணிகளே அதை தீர்மானிக்கும். அதிக கொழுப்புள்ள 30 வயதுடைய ஒருவர், நீரிழிவு நோயாளியாக இருந்தாலோ அல்லது உயர் ரத்த அழுத்தம், குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய், புகைப்பிடித்தல் போன்ற பல ஆபத்துக் காரணிகளைக் கொண்டிருந்தாலோ அவர் ஸ்டேடின் மருந்துகளை எடுக்கத் தொடங்க வேண்டும்.

இதற்கான வரம்புகள் இப்போது குறைந்துள்ளன. பலமுறை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு 30 mg/dL என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, 40 வயது வரை காத்திருந்து பரிசோதனை செய்வது மிகவும் தாமதமானது. ஏனெனில் அதற்குள் ஆபத்துக் காரணிகள் உருவாகியிருக்கும். இருப்பினும், ஆபத்துக் காரணிகள் எதுவும் இல்லாமல், எல்டிஎல் அளவு சுமார் 130 mg/dL ஆக இருந்தால், உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாகவே அதைச் சமாளிக்க முடியும். எந்த மருந்தும் தேவையில்லை.

பரிசோதனை, மருந்து பயன்பாட்டிற்கு முன்பு எது முக்கியமானது?

ஆபத்து வரும் முன்னே ஆரோக்கியமான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை குழந்தைகளின் பள்ளியிலேயே தொடங்குவது நல்லது. உடல் எடையைக் குறைத்தல், உடற்பயிற்சி செய்தல், புகைப்பழக்கத்தை நிறுத்துதல் ஆகியவற்றின் மூலம் இதய நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம்.

இரண்டாம் நிலைத் தடுப்பு என்பது பரிசோதனை மூலம் ஏற்கனவே இருக்கும் நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதாகும். புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் ஆகியவை காரணமாக இருக்கலாம். காலை உணவைத் தவிர்ப்பதும், இரவு உணவை அதிகமாக உண்பதும் தீங்கு விளைவிக்கும். உடலுக்குச் சுறுசுறுப்பான நேரங்களில்தான் கலோரிகள் தேவை, இரவில் உடல் செயலற்ற நிலையில் இருக்கும்போது அதிக உணவு தேவையில்லை. அவ்வாறு அதிகம் சாப்பிடும்போது, உடலில் கொழுப்பு சேமிக்கப்படுகிறது.

இளம் நோயாளிகளை ஸ்டேடின் மருந்துகளை எடுக்க வைப்பது எவ்வளவு கடினம்?

'இது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா? இரண்டு மாதங்களுக்குப் பிறகு இதை நிறுத்திவிடலாமா?' இளம் இதய நோயாளிகள் பெரும்பாலும் முதலில் கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

ஆனால் இது உடலில் இருக்கும் லிப்பிட் (கொழுப்பு) அளவுகளைப் பொறுத்தது என்பதை அவர்களிடம் விளக்குகிறோம். இலக்கு அளவுகள் எட்டப்பட்டதும் மருந்தின் அளவை படிப்படியாகக் குறைக்கலாம் (உதாரணமாக அட்டோர்வாஸ்டாடின் மருந்து அளவை 18 மி.கி. -லிருந்து 5 மி.கி. -க்குக் குறைப்பது). மருந்துகளை முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பான மாற்று வழி அல்ல. ஏனெனில், உயர் கொழுப்பு அளவு - சிறுநீரக பாதிப்பு மற்றும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சிக்கல்கள் ஏதுமில்லாத நிலையில், சுமார் 10–20% நோயாளிகள் காலப்போக்கில் மருந்துகளை முழுமையாக நிறுத்திக்கொள்ளலாம்.

தமிழில்: எம். முத்துமாரி

Summary

Heart attack: waiting until 40 to get screened is too late

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.