காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை!

குடும்பத்துடன் இறுதிநாள்களைக் கழிக்கும் வகையில் கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை

Supreme Court

உச்ச நீதிமன்றம்

Published On :

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி, தன்னுடைய 105 வயது வரை சிறையில் கழித்த நிலையில், இறுதி நாள்களை குடும்பத்துடன் இருக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

1920ஆம் ஆண்டு பிறந்தவர் ராசிக் மண்டல். இவர் கடந்த 1988ஆம ஆண்டு கொலை வழக்கில் கைதாகி, 1994ஆம் ஆண்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மால்டா மாவட்டத்தில் பிறந்த ராசிக், தன்னுடைய 68 வயதில் கைதாகி, சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார். ஆயுள் தண்டனையை ரத்துக் கோரிய மனுவை 2018ஆம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றமும், 24 ஆண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தன.

ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராசிக், வயது முதுமை காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சீர்திருத்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்தான், ராசிக்கின் மகன் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்னும் அவர் உயிருடன் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியது. பிறகு, அவரை ஏன் இடைக்கால பரோலில் விடுவிக்க வேண்டும். நிரந்தரமாக விடுதலை செய்து விடலாமா? இருக்கப்போகும் சிறிது காலத்தை அவர் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கட்டுமே என்று கூறி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.