
உயரிய கருத்துகள்… மாறுபட்ட தீர்ப்புகள்! உச்ச நீதிமன்றம் குறித்து மெஹ்பூபா!
நீதித்துறையின் செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பும் மெஹ்பூபா பற்றி..

மெஹ்பூபா
வழக்கு விசாரணைகளின்போது நீதித்துறை உன்னத கருத்துகளை முன்வைக்கிறது, ஆனால் பெரும்பாலும் அத்தகைய கருத்துகளுக்கு முரணான தீர்ப்புகளையே வழங்குகிறது என மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
வாக்காளர் பட்டியலைச் சிறப்புத் தீவிர மறுஆய்வு (எஸ்ஐஆர்) செய்வதற்காகத் தேர்தல் ஆணையம் மாற்றியமைத்த படிவம் 6-க்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த கருத்து குறித்துப் பேசிய மெஹ்பூபா,
கடந்த பத்து ஆண்டுகளில், நீதிமன்ற அவமதிப்புக்குச் சமமான செயல்களை நீதித்துறை மீண்டும் மீண்டும் இயல்பானதாக மாற்றிவிட்டு, சாதாரணமாகக் கடந்து சென்றுவிட்டது.
நீதிமன்றத்தில் உயரிய கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன; ஆனால் தீர்ப்பு வழங்கும் நேரம் வரும்போது, அதன் முடிவு பெரும்பாலும் அந்தக் கருத்துகளுக்கு முற்றிலும் முரணாகவே அமைகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







