
தீபக் சிங்க்லாவின் ஜாமீன் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க நோட்டீஸ்!
பணமோசடி வழக்கில் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் கோரும் உச்ச நீதிமன்றம் பற்றி..

கடன் வழக்கில் தீர்ப்பு - பிரதிப் படம்
பணமோசடி வழக்கில் தனது ஜாமீன் மனுவை நிராகரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தீபக் சிங்க்லா தாக்கல் செய்ய மனு தொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தீபக் சிங்க்லா மே 18 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தின் செப். 9 உத்தரவுக்கு எதிராக சிங்க்லா தாக்கல் செய்த மனுவின அடிப்படையில், தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
வழக்கின் பின்னணி
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டது. வங்கியின் உதவிப் பொது மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 2018-ல் சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது.
மகேஷ் டிம்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்த தனது துணை நிறுவனம், தனியார் நபர்கள், வங்கி அதிகாரி ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து, வங்கியின் 'ஃபினக்கிள்' அமைப்பில் உரிய பதிவுகள் ஏதுமின்றி, அங்கீகரிக்கப்படாத ஸ்விஃப்ட் திருத்தங்கள் மூலம் வெளிநாட்டுக் கடன் பத்திரங்களின் மதிப்பை மோசடியாக உயர்த்தியதாகவும், இதனால் வங்கிக்கு சுமார் ரூ. 155.21 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், அந்நிறுவனம் செலுத்த வேண்டிய அசல் தொகை ரூ. 239.46 கோடியாக இருப்பது கண்டறியப்பட்டது.
மத்திய புலனாய்வுத் துறை ஆகஸ்ட் 10, 2020 அன்று குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனது விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியது.
இந்த வழக்கு விசாரணையில் ஆம் ஆத்மியை சேர்ந்த தீபக் சிங்க்லா குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அமலாக்கத் துறை விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
தீபக் சிங்க்லா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.
மேல்முறையீடு ஜாமீன் மனு மீது பதிலளிக்கக் கோரி அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






