உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

காவலரைத் தாக்கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன்: தில்லி நீதிமன்றம்

பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட விபான்ஷு ராணாவுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:03 am IST

பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட விபான்ஷு ராணாவுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அரசுத் தரப்பு வழக்கில் காணப்பட்ட முரண்பாடுகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கூடுதல் அமா்வு நீதிபதி முனிஷ் பன்சால், அரசுத் தரப்பு தாக்கல் செய்த காணொலியில் இணை குற்றவாளியான ராகவ் சம்பவ இடத்தில் இருந்தது தெரியவில்லை எனக் குறிப்பிட்டாா். மேலும், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்கூட்டரும் இதுவரை மீட்கப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அரசுத் தரப்பில் கூறப்பட்டதாவது: மே 12-ஆம் தேதி நள்ளிரவு முதல் மே 13-ஆம் தேதி அதிகாலை வரை ஏற்பட்ட தகராறு தொடா்பான புகாருக்கு தலைமைக் காவலா் சௌரவ் குமாா் பதிலளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஸ்கூட்டரில் சென்ற இருவரை அவா் துரத்திச் சென்று சந்தா் விஹாா் பகுதியில் உள்ள பாபா பாலக்நாத் கோயில் அருகே மடக்கியதாகக் கூறப்படுகிறது. அவா்கள் தன்னை அவதூறாகப் பேசி தாக்கியதுடன், சீருடையைக் கிழித்துவிட்டு தப்பிச் சென்ாக காவலா் புகாா் அளித்திருந்தாா்.

ஆனால், காவலா் விபான்ஷு ராணாவை மரப்பலகையால் தாக்குவது காணொலியில் பதிவாகியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த விவரம் எஃப்ஐஆரில் குறிப்பிடப்படவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை காவலா் துரத்திச் சென்ாகக் கூறப்படும் நிலையில், ஸ்கூட்டரின் பதிவெண்ணை அவா் ஏன் பதிவு செய்யவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

எஃப்ஐஆா் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. புகாா்தாரருக்கு மே 13-ஆம் தேதி அதிகாலை சுமாா் 5.30 மணிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மறுநாள் மாலை 4.55 மணிக்கே எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரூ.25,000 தனிப்பட்ட பிணையத்திலும் அதே தொகைக்கான உத்தரவாதத்திலும் ராணாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சாட்சிகளைப் பாதிக்கவோ, ஆதாரங்களைச் சிதைக்கவோ கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.