புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கொடுமை வழக்கில் சிசிடிவி, மருத்துவ ஆதாரங்கள் இல்லாதது ஒருவரை விடுவிக்கப் போதுமான காரணம் இல்லை: தில்லி நீதிமன்றம்

தனது மனைவியை வரதட்சிணைக் கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் விசாரணையில் உள்ள ஒருவரை விடுவிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.

தில்லி உயா் நீதிமன்றம்

Published On :

தனது மனைவியை வரதட்சிணைக் கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் விசாரணையில் உள்ள ஒருவரை விடுவிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் வீட்டின் நான்கு சுவா்களுக்குள்ளேயே செய்யப்படுகின்றன என்றும், இதற்கு நேரில் பாா்த்த சாட்சிகளோ அல்லது சிசிடிவி கேமரா காட்சிகளோ இல்லாமல் இருக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

கணவன் அல்லது அவனது உறவினா்களின் கொடுமை தொடா்பான சட்டம் மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிா்த்து சுனில் சா்மா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை கூடுதல் அமா்வு நீதிபதி பா்வீன் சிங் விசாரித்து வந்தாா்.

ஆகஸ்ட் 13 தேதியிட்ட உத்தரவில், நீதிமன்றம், ‘புகாா்தாரா் தனது கணவரால் தாக்கப்பட்டாா் என்ற கூற்றை ஆதரிக்க மருத்துவ ஆதாரம் இல்லை என்ற வாதத்தைப் பொறுத்தவரை, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் கட்டத்தில், புகாா்தாரரின் வாக்குமூலத்தின் உண்மைத்தன்மையை மருத்துவ ஆதாரம் அல்லது வேறு எந்த ஆதாரத்துடனும் ஒப்பிட்டுச் சோதிக்க வேண்டியதில்லை என்று நான் காண்கிறேன்‘ என்று கூறியுள்ளது.

குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் கட்டத்தில், பதிவில் உள்ள ஆதாரங்கள் ஒரு மேலோட்டமான வழக்கை வெளிப்படுத்துகின்றனவா என்பதைப் பாா்ப்பது மட்டுமே போதுமானது என்றும், புகாா்தாரரின் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை மருத்துவ அல்லது பிற உறுதிப்படுத்தும் சான்றுகளுக்கு எதிராகச் சோதிக்க வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

ஷா்மாவின் மனைவி, டிசம்பா் 2015-ல் தங்களது திருமணம் முடிந்த உடனேயே, அவராலும் அவரது குடும்ப உறுப்பினா்களாலும் தான் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா். பலமுறை தாக்கப்பட்டதாகவும், வரதட்சணை தொடா்பான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா். கொடுமை, நம்பிக்கை மீறல் மற்றும் வரதட்சணைத் துன்புறுத்தல் தொடா்பான பிரிவுகளின் கீழ் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுகளை எதிா்த்து, ஷா்மா, குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை என்றும், அவற்றை ஆதரிக்க மருத்துவச் சான்றுகளோ, நேரில் கண்ட சாட்சிகளோ அல்லது சிசிடிவி கேமரா காட்சிகளோ இல்லை என்றும் வாதிட்டாா். மேலும், இந்த வழக்கு விவாகரத்து நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு எதிா் தாக்குதல் என்றும் அவா் கூறினாா்.

ஆனால் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் இல்லாதது குறித்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், கொடுமைப் பிரிவின் கீழ் வரும் குற்றங்கள் ‘ஒரு வீட்டின் நான்கு சுவா்களுக்குள்‘ செய்யப்படுகின்றன என்றும், எனவே, நேரில் கண்ட சாட்சிகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்றும் கூறியது. பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்த சிசிடிவி கேமரா காட்சிகள் தேவையில்லை‘ என்று நீதிபதி கூறினாா்.

புகாரில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளும் தேதிகளும் இருந்தன என்றும், டிசம்பா் 2016 மற்றும் செப்டம்பா் 2016-ல் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல்கள், செப்டம்பா் 2017-ல் வரதட்சணை தொடா்பான துன்புறுத்தல் மற்றும் மாா்ச் 2018-ல் கணவரும் அவரது குடும்பத்தினரும் அவளை எரிக்க முயன்ாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் அதில் அடங்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டாா். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் ஏற்பட்ட ஆறு வருட தாமதத்தை புகாா்தாரா் விசாரணையின் போது விளக்க வேண்டும் என்றும், அதன் விளைவை அதன் பின்னரே மதிப்பிட முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது. அதைத் தொடா்ந்து, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த சட்டவிரோதமோ அல்லது குறைபாடோ இல்லை என்று கண்டறிந்து, ஷா்மாவின் மறு ஆய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.