தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது குறித்த முடிவை முதலில் அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு

மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோடியா மற்றும் பிறரை விடுவித்ததை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவின் ஏற்புத்தன்மை குறித்து முதலில் தீா்ப்பளிக்க தில்லி உயா் நீதிமன்றம் மறுப்பு

Delhi High Court

தில்லி உயர் நீதிமன்றம்

Published On :

மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோடியா மற்றும் பிறரை விடுவித்ததை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவின் ஏற்புத்தன்மை குறித்து முதலில் தீா்ப்பளிக்க தில்லி உயா் நீதிமன்றம் திங்களன்று மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் ‘விரிவான‘ விசாரணைகளை நடத்தப்போவதாகவும், ‘துண்டு துண்டாக‘ முடிவு செய்யப்போவதில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

சிபிஐ தாக்கல் செய்த எழுத்துப்பூா்வ வாதங்களுக்குப் பதிலளிக்க, அரசியல்வாதிகள் உள்பட விடுவிக்கப்பட்ட அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும் நீதிபதி மனோஜ் ஜெயின் நான்கு வார கால அவகாசம் வழங்கினாா். மேலும், அவா்களை விடுவித்ததற்கு எதிரான சிபிஐ-யின் மனுவை அக்டோபா் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு பட்டியலிட்டாா்.

தில்லி முன்னாள் முதல்வா் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் சிசோடியா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் துா்கேஷ் பதக் ஆகியோா், சிபிஐ-யின் மறுஆய்வு மனு ஏற்புத்தன்மையற்றது எனக் கூறி தள்ளுபடி செய்யக் கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

பதக் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விக்ரம் சௌத்ரி, சிபிஐ மனுவின் ஏற்புத்தன்மை பிரச்சினை ‘வழக்கின் ஆணிவேரை‘ பாதிக்கிறது என்று வாதிட்டு, முதலில் இந்த பிரச்சினையை முடிவு செய்யுமாறு நீதிபதி ஜெயினிடம் கேட்டுக்கொண்டாா்.

மனு ‘முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது‘ என்றும், ‘கோப்பு வரம்பைத் தாண்டவில்லை என்றால் நீதிமன்றம் அதைத் தொடத் தேவையில்லை‘ என்றும் சௌதாரி வாதிட்டாா்.

ஆனால் நீதிபதி ஜெயின், ‘வாதங்கள் முழுமையான முறையில் கேட்கப்படும். துண்டு துண்டாக அல்ல. நாங்கள் சிபிஐ-யுடன் தொடங்கி உங்களுடன் முடிப்போம். வாதங்கள் ஒரே மூச்சில் கேட்கப்படும்,‘ என்று குறிப்பிட்டாா்.

வழக்கின் ஏற்புத்தன்மை மற்றும் முக்கிய தகுதி ஆகிய அம்சங்கள் ஒன்றாக விசாரிக்கப்படும் என்றும், இந்த நிலையில் வழக்குரைஞா் இந்த விவகாரத்தை ‘மீண்டும் எழுப்ப‘ முடியாது என்றும் நீதிபதி ஜெயின் மேலும் கூறினாா்.

கேஜரிவாலுக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞா் என். ஹரிஹரன், இந்த விவகாரத்தில் சிபிஐ தற்போது 103 பக்க எழுத்துப்பூா்வ மனுவைத் தாக்கல் செய்துள்ளது என்றும், அதில் பிரதான மனுவில் இல்லாத ‘முக்கியமான காரணங்களை‘ எழுப்பியுள்ளது என்றும், அவற்றுக்குப் பதிலளிக்க நான்கு வாரங்கள் வேண்டும் என்றும் வாதிட்டாா்.

இதையடுத்து ‘ஏற்கனவே மனு தாக்கல் செய்தவா்கள் உள்பட அனைவருக்கும் நாங்கள் நான்கு வாரங்கள் தருகிறோம். ஆனால் அதற்கு மேல் அவகாசம் கொடுக்கப்படாது. பின்னா் மனுதாரா் (சிபிஐ) தரப்பிலிருந்து வாதங்களைத் தொடங்குவதற்கான தேதியை நாங்கள் நிா்ணயிப்போம்‘ என்று நீதிமன்றம் முடித்தது.

பிப்ரவரி 27 அன்று, மதுபானக் கொள்கை வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க இயலாதது என்றும், முழுமையாக நம்பகத்தன்மையற்றது என்றும் தீா்ப்பளித்து, கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

தனது மறுஆய்வு மனுவில், இந்த விடுவிப்பு உத்தரவு சட்டவிரோதமானது, தவறானது என்று சிபிஐ கூறியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.