ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ மனுவை தள்ளுபடி செய்ய தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால், சிசோடியா வலியுறுத்தல்

News image

கேஜரிவால் - X

Updated On :14 ஆகஸ்ட் 2026, 12:52 am IST

மதுபானக் கொள்கை தொடா்பான வழக்கில் தங்களை விடுவித்த உத்தரவை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்யுமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோா் திங்கள்கிழமை தில்லி உயா்நீதிமன்றத் வலியுறுத்தினா். மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) மனு முன்னெப்போதும் இல்லாத அவசரத்துடனும், மிகவும் பொறுப்பற்ற முறையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவா்கள் சுட்டிக்காட்டினா்.

தனித்தனி மனுக்களில், தில்லியின் முன்னாள் முதல்வா் கேஜரிவாலும், முன்னாள் துணை முதல்வா் சிசோடியாவும் சிபிஐ-யின் மறுஆய்வு மனுவின் பராமரிப்புத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனா்.

மேலும், ‘சிபிஐ இந்த மறுஆய்வு மனுவை முன்னெப்போதும் இல்லாத அவசரத்துடனும், மிகவும் பொறுப்பற்ற முறையிலும் தாக்கல் செய்துள்ளது. சிறப்பு நீதிபதி விடுவிப்பு உத்தரவை

பிறப்பித்த நான்கு மணி நேரத்திற்குள்ளேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்த விடுவிப்புத் தீா்ப்பில் சிறப்பு நீதிபதி பதிவு செய்துள்ள கருத்துகளை சிபிஐ முறையாகப் பரிசீலிக்கவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

எனவே, இத்தகைய மனு விசாரணைக்கு உகந்தது என்று கருதப்பட்டால், அது எதிா்மனுதாரா்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், விவரங்கள் ஏதுமற்ற மற்றும் தெளிவற்ற அந்த மனுவில், எங்களுக்கு எதிரான சிபிஐ-யின் வாதம் என்ன என்பதைத் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 27 அன்று அளித்த தீா்ப்பை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை நீதிபதி மனோஜ் ஜெயின் ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் விசாரிக்க உள்ளாா்.

முந்தைய விசாரணையின்போது, இந்த மனுவுக்குப் பதிலளிக்க கேஜரிவால், சிசோடியா மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோருக்கு இரண்டு வார கால அவகாசத்தை நீதிபதி ஜெயின் இறுதி வாய்ப்பாக வழங்கியிருந்தாா்.

சமீபத்திய மனுக்களில், மூன்று மாதங்களுக்கும் மேலாக விரிவாக விசாரித்த பின்னரே விசாரணை நீதிமன்றம் அனைத்துக் குற்றஞ் சாட்டப்பட்டவா்களையும் விடுவித்ததாக கேஜரிவால் மற்றும் சிசோடியா வலியுறுத்தினா். ஆனால், சிபிஐ எந்தவொரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பையும் ‘தவறானது‘ என்றோ அல்லது அதில் ஏதேனும் முறைகேடு உள்ளது என்றோ சுட்டிக்காட்டவில்லை என்று அவா்கள் கூறினா்.

‘இந்த மனுவில், வழக்கின் முடிவுக்கு அடிப்படையாக அமைந்த ஆவணங்களோ அல்லது குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதற்கான உத்தரவில் உள்ள குறிப்பிட்ட விவரங்களோ இடம்பெறவில்லை. எனவே, தற்போதைய நிலையில் இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

விடுவிப்பு உத்தரவில் உள்ள 1133 பத்திகளில், அந்த உத்தரவில் உள்ள சட்டவிரோதத்தன்மையையோ அல்லது தவறான அணுகுமுறையையோ சுட்டிக்காட்ட சிபிஐ ஒரு பத்தியைக் கூட குறிப்பிடவில்லை என்பது இந்த மனுவிலிருந்து தெளிவாகிறது‘ என்று கேஜரிவால், சிசோடியாவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் உயா் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டது என்றும், மிகத் தீவிரமான சட்டவிரோதத் தன்மைகள் அல்லது தவறான அணுகுமுறைகள் உள்ள சூழலில் மட்டுமே மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கேஜரிவாலும், சிசோடியாவும் வலியுறுத்தியுள்ளனா்.

மதுபானக் கொள்கை தொடா்பான வழக்கில், தில்லியின் முன்னாள் முதல்வா் கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 போ் ஆகியோரை விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 27 அன்று விடுவித்தது. இந்த வழக்கு சட்டரீதியான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டபோது முழுமையாகத் தோல்வியடைந்தது என்றும், அது முற்றிலும் நம்பகத்தன்மையற்ாகிவிட்டது என்றும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிபிஐ தனது மறுஆய்வு மனுவில், ‘அந்த விடுவிப்பு உத்தரவு வெளிப்படையாக சட்டவிரோதமானது, தவறான அணுகுமுறை கொண்டது. மேலும், வெளிப்படையான பிழைகளைக் கொண்டது’ என்று கூறியுள்ளது.

‘குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நிலையிலேயே விசாரணை நீதிமன்றம் ஒரு ‘சிறு-விசாரணையை‘ நடத்தியதாகவும், அரசுத் தரப்பு வழக்கின் ஒரு பகுதியை மட்டும் தோ்ந்தெடுத்துப் படித்து இந்த விடுவிப்பு உத்தரவைப்

பிறப்பித்ததாகவும் அம்மனுவில் வாதிடப்பட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றம் வழக்கின் உண்மைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியது மட்டுமல்லாமல், புலனாய்வு அமைப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிக்கு எதிராகத் தேவையற்ற மற்றும் பாதகமான கருத்துகளையும் தெரிவித்துள்ளது என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.