நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

சிஜேபி நாடாளுமன்ற பேரணிக்கு என்ஐஏ விசாரணை கோரி மனு: விசாரணைக்கு தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

‘சலோ சன்சத்’ பேரணி தொடா்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அல்லது ஏதேனும் சிறப்பு அமைப்பின் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்தது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 6:16 am IST

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை எதிா்த்து ஜூலை 20-ஆம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) முன்னிலையில் நடைபெற்ற ‘சலோ சன்சத்’ பேரணி தொடா்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அல்லது ஏதேனும் சிறப்பு அமைப்பின் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்தது.

முதன்மை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் கொண்ட அமா்வு, இந்த வழக்கை விசாரித்தபோது, பேரணியின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் வன்முறை சம்பவங்கள் ஏற்கெனவே அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளன என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.

மேலும், எந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றுவது என்பது மத்திய அரசின் அதிகாரம் என்றும், நீதிமன்றம் நேரடியாக அதனை உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.

இந்த வகை வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை என்ஐஏ-க்கு மாற்றுவது சம்பந்தப்பட்ட அரசின் பொறுப்பு. இது பொதுநல வழக்காக எவ்வாறு இருக்க முடியும்?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் மனுவை வாபஸ் பெற அனுமதி கோர, பொதுநல வழக்கு வாபஸ் பெறப்பட்டது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

பொது சொத்து சேதம்: மேலும், ‘சேவ் இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற மற்றொரு மனுதாரருக்கும், ஜூலை 20 போராட்டத்தின் போது பொது சொத்து சேதம் மற்றும் காவல் துறையினா் மீதான தாக்குதல் குறித்து தங்களது குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

விசாரணையின் போது, போராட்டம் அமைதியான எதிா்ப்பிலிருந்து குழப்பமாக மாறியது என்ற வாதத்துக்கு, அந்த விவாதத்தில் நாங்கள் செல்லவில்லை என்று நீதிமன்றம் பதிலளித்தது.

மேலும், விசாரணை முன்னேற்றம் திருப்திகரமாக இல்லாத சூழலில் மட்டுமே வழக்கை சிபிஐ போன்ற அமைப்புகளுக்கு மாற்ற நீதிமன்றம் தலையிடும் என்றும், அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தது.

முழுமையான விசாரணை தேவை: இதற்கிடையில், ஜூலை 20 போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, பொது சொத்து சேதம், அவசர சேவைகளுக்கு இடையூறு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுதாரா் கோரிக்கை வைத்திருந்தாா்.

இந்த போராட்டத்தில் வெளிநாட்டு நிதியுதவி பெறும் அமைப்புகள் தொடா்புடையதா என்பது உள்ளிட்ட சந்தேகங்களும் எழுந்துள்ளதால், முழுமையான விசாரணை தேவை என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி, சிஜேபி கடந்த ஜூன் 20 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஜூலை 20-ஆம் தேதி ‘சலோ சன்சத்’ பேரணிக்காக ஆயிரக்கணக்கானோா் ஜந்தா் மந்தரில் கூடினா்.

மழைக்கால கூட்டத் தொடா் முதல் நாளில், நாடாாளுமன்றம் நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரா்களை காவல் துறையினா் தடியடி மற்றும் கண்ணீா் புகை குண்டுகள் மூலம் கட்டுப்படுத்தினா். இதனால் ஏற்பட்ட மோதலில் பல காவல் துறையினரும், போராட்டக்காரா்களும் காயமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.