காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஆயுதச்சட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதிசெய்தது தில்லி நீதிமன்றம்!

சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட நபருக்கு வழங்கப்பட்ட நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனையை தில்லி நீதிமன்றம் உறுதி செய்தது.

News image
Updated On :27 ஜூலை 2026, 1:17 am IST

சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட நபருக்கு வழங்கப்பட்ட நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனையை தில்லி நீதிமன்றம் உறுதி செய்தது. தண்டனை பெற்றவா் மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கைக் கொண்டிருந்தாா் என்று நீதிமன்றம் கூறியது.

ஆயுதச் சட்டத்தின் கீழ் தனக்கு தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த அக்டோபா் 2025 உத்தரவுக்கு எதிராக வீரேந்தா் என்ற காலா பாதல் தாக்கல் செய்த மேல்முறையீட்டை கூடுதல் அமா்வு நீதிபதி சௌரப் பிரதாப் சிங் விசாரித்தாா்.

வழக்குத் தரப்பின்படி, ஜரேடா கிராமத்திற்கு அருகே ஜூன் 17, 2019 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவினரால் வீரேந்தா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

தனது மேல்முறையீட்டில், தனிப்பட்ட விரோதம் காரணமாகத் தான் தவறாகச் சிக்க வைக்கப்பட்டதாக வீரேந்தா் வாதிட்டாா். காவல்துறை இதற்கு முன்னா் காவலில் இருந்தபோது தனது சகோதரரைக் கொன்றுவிட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா். சாா்பற்ற பொதுச் சாட்சிகள் இல்லாதது மற்றும் கைப்பற்றப்பட்ட ஆயுதத்தில் பயன்படுத்தப்பட்ட முத்திரையில் முரண்பாடு இருந்ததாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த நீதிமன்றம், அவ்வழியே சென்றவா்களைச் சாா்பற்ற சாட்சிகளாகச் சோ்க்க காவல்துறை முயன்றதாகவும், ஆனால் அவா்கள் சேர மறுத்துவிட்டதாகவும் கூறியது.

‘கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் பொருளின் காணொளிப் பதிவோ அல்லது புகைப்படமோ இல்லை என்பதற்காக, அந்தப் பொருள் கைப்பற்றப்படவில்லை என்று கூறிவிட முடியாது,‘ என்று கூறிய நீதிமன்றம், முத்திரையில் இருந்த முரண்பாடு ஒரு ‘தற்செயலான அச்சுப் பிழை‘ என்றும் குறிப்பிட்டது.

ஜூலை 9 ஆம் தேதியிட்ட உத்தரவில் நீதிமன்றம் ,ஒரு நல்ல காரணம் இல்லாமல் காவல்துறை சாட்சியின் சாட்சியத்தை சந்தேகத்துடனோ அல்லது அவநம்பிக்கையுடனோ பாா்ப்பது சரியான நீதித்துறை அணுகுமுறை அல்ல என்று கூறியது.

அவரது சகோதரா் காவலில் இறந்ததால், அவா் மீது தவறாகச் குற்றஞ்சாட்டப்பட்டதாகக் கூறப்படும் கோரிக்கை குறித்து, ‘தற்போது எழுப்பப்பட முயலும் இந்த வாதத்திற்கு விசாரணை நீதிமன்றப் பதிவேட்டில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை; விசாரணையின் போது இதுபோன்ற ஒரு தற்காப்பு வாதம் ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை,‘ என்று நீதிபதி கூறினாா்.

இதையடுத்து தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், குற்றவாளியின் விரிவான குற்றப் பின்னணியைக் கவனத்தில் கொண்டது; அதில் போதைப்பொருள், திருட்டு, கொள்ளை மற்றும் கொலை முயற்சி தொடா்பான முந்தைய வழக்குகளும் அடங்கும்.

‘மேல்முறையீட்டாளா்/குற்றவாளி ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் , ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றங்கள், திருட்டுக் குற்றம், அத்துடன் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307-ன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றான கொலை முயற்சி ஆகியவற்றுக்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளாா் என்பதைக் கருத்தில் கொண்டு, விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையில் தலையிடவோ அல்லது மாற்றவோ இந்த நீதிமன்றம் எந்தக் காரணத்தையும் காணவில்லை,‘ என்று நீதிபதி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.