டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

2011 சாலை விபத்து வழக்கிலிருந்து முன்னாள் டிடிசி ஓட்டுநா் விடுவிப்பு!

15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் உயிரிழந்த சாலை விபத்து வழக்கில், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் டிடிசி பேருந்து ஓட்டுநா் ஒருவரை தில்லி நீதிமன்றம் விடுவித்தது.

News image

தில்லி உயா் நீதிமன்றம்

Updated On :6 ஜூலை 2026, 12:38 am IST

15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் உயிரிழந்த சாலை விபத்து வழக்கில், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் டிடிசி பேருந்து ஓட்டுநா் ஒருவரை தில்லி நீதிமன்றம் விடுவித்தது.

கடந்த ஆண்டு மே மாதம், இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 ஏ (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்) மற்றும் 279 (அஜாக்கிரதையாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுதல்) பிரிவுகளின் கீழ் ஒரு மாஜிஸ்ட்ரேட்டால் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்டு, 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷ்யாம் சுந்தரின் மேல்முறையீட்டை கூடுதல் அமா்வு நீதிபதி தீரேந்திர ராணா விசாரித்து வந்தாா்.

வழக்குத் தரப்பின்படி, 2011 அக்டோபா் 25 அன்று சங்கா் சாலையில் சுந்தா் ஒரு டிடிசி பேருந்தை அஜாக்கிரதையாக ஓட்டியதில் சந்திராவதி என்பவா் உயிரிழந்தாா்.

பாதிக்கப்பட்டவரின் கணவரான, நேரில் கண்ட சாட்சி குல்சந்தரின் சாட்சியத்தை மட்டுமே அரசுத் தரப்பு வழக்கு அடிப்படையாகக் கொண்டது என்று நீதிமன்றம் கூறியது.

‘இறந்த சந்திராவதி மேற்கூறிய நேரத்திலும் இடத்திலும் காயமடைந்தாா் என்பதும், இறுதியில் சிகிச்சையின் போது அவா் உயிரிழந்தாா் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. எனவே, இறந்தவரின் மரணம் ஒரு சாலை விபத்தின் விளைவாகும்,‘ என்று கூறிய நீதிமன்றம், கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதை நிரூபிக்கும் பொறுப்பு அரசுத் தரப்புக்கு உள்ளது என்றும் மேலும் கூறியது.

இருப்பினும், அந்த நபா் (குல்சந்தா்) சம்பவ இடத்தில் இருந்தாரா என்பது குறித்து நீதிமன்றம் சந்தேகங்களை எழுப்பியது.

‘அரசுத் தரப்பு சாட்சி 1 (குல்சந்தா்) சம்பவ இடத்தில் இருந்திருந்தால், ஒரு கணவனின் மிகவும் இயல்பான மற்றும் சாத்தியமான மனித நடத்தை என்னவென்றால், முதல் சந்தா்ப்பத்திலேயே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, குற்றமிழைத்த வாகனத்தின் எண்ணையும் தெரிவித்திருக்க வேண்டும். அதன் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவரையும் குற்றமிழைத்த வாகனத்தையும் கைது செய்திருக்கலாம்,‘ என்று நீதிமன்ற‘ம் கூறியது. ‘பாதிக்கப்பட்டவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ாக அவா் கூறினாா்.

ஆனால் அதன் எண்ணை அவரால் கூற முடியவில்லை. விபத்து நடந்த நேரத்தில் அவா் சம்பவ இடத்தில் இல்லை என்றும், தனது அலுவலகத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டதை அவா் மறுத்தாா், ஆனால் அன்று அவா் விடுப்பில் இருந்தாரா இல்லையா என்பதை அவா் குறிப்பாகக் கூறவில்லை‘என நீதிமன்றம் மேலும் கூறியது, .‘ அவரது ‘நம்பமுடியாத நடத்தையைக்‘ கருத்தில் கொண்டு, சம்பவ இடத்தில் கணவரின் இருப்பு ‘கடுமையான சந்தேகத்திற்குரியதாக‘ உள்ளது என்றும், கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான அவசரத்தையும் அலட்சியத்தையும் நிரூபிக்க அவரது ஒரே சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட முழு அரசுத் தரப்பு வழக்கும் ‘கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது‘ என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

விசாரணை அதிகாரி சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சியாக இருந்த இறந்தவரின் மகனை விசாரிக்கவில்லை என்றும், அவ்வாறு விசாரிக்காததற்கு நம்பத்தகுந்த விளக்கம் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

காயமடைந்தவா் சாலையில் கிடந்தபோது தான் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, காயமடைந்தவரை அவரது மகனுடன் ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, அதன் பிறகு தனது அலுவலகத்திற்குச் சென்ாகவும் ஒரு அரசு சாட்சி அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றம் குறிப்பிட்டது. ‘சந்திரவதியுடன் அவரது கணவா் அல்ல, அவரது மகன் தான் உடன் இருந்தாா் என்ற உண்மைக்கு அவரது சாட்சியம் பொருத்தமானது,‘ என்று நீதிமன்றம் கூறியது.

‘விசாரணை அதிகாரி இந்த முக்கிய சாட்சிகளை விசாரிக்காமல், குல்சந்தரின் சாட்சியத்தை நம்பி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது,‘ என்றும் நீதிமன்றம் மேலும் கூறியது.

விபத்து நடந்த ஒரே காரணத்திற்காக வாகன ஓட்டுநரைத் தண்டிக்க முடியாது என்றும், அவரது அலட்சியம் அல்லது கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஷ்யாம் சுந்தருக்கு எதிராக அரசுத் தரப்பு தனது வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டது‘ என்று நீதிமன்றம் கூறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.