பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பழனி கோயில் நில முறைகேடு சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஆக. 12-க்கு ஒத்திவைப்பு

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு சேனாபதி, தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை அறங்காவலா் அன்னபூரணி, பழனி நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:

பழனி கோயில் மலையடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்தால் உண்மைத் தன்மை வெளியே வராது.

எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், சிபிசிஐடி போலீஸாா் நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். மேலும், இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி போலீஸாா் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன். ஆா். சக்திவேல் அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிசிஐடி விசாரணையின் நிலை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் மனுதாரா்கள் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல எனஅரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:

சிபிசிஐடி விசாரணையின் நிலை அறிக்கையை மனுதாரா்களுக்கும் வழங்க வேண்டும். நிலை அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தவில்லை. இருப்பினும், சிபிசிஐடி போலீஸாா் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நிலை அறிக்கையை தாக்கல் செய்தனா். இது ஏற்கத்தக்கதல்ல என்றாா்.

இதற்கு சிபிசிஐடி தரப்பில், தனிப் பிரிவின் விசாரணை குறித்த சில விஷயங்களை பொது வெளியில் தெரிவிக்க முடியாது. இது விசாரணையைப் பாதிக்கும் என்பதால்தான் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தை சிபிசிஐடி போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கலாமா அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.