கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பழனி கோயில் நில முறைகேடு: ஆக. 5-க்குள் அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவு

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையை வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பழனி கோயில்

Published On :

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையை வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பழனி நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு சேனாதிபதி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:

பழனி மலையடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் விதிமுறைகளை மீறி, தனிநபா்கள் இருவரின் பெயரில் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், பதிவுத் துறை சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் சுவாமிகள், பாப்பான்குளத்தைச் சோ்ந்த வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். பின்னா், இந்த வழக்கு விசாரணை காவல் துறையின் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனடிப்படையில், இந்த நில முறைகேடு வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கின்றனா். இந்த விவகாரத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தால் உண்மை வெளியே வராது.

எனவே, சிபிசிஐடி போலீஸாா் இதுவரை மேற்கொண்ட விசாரணை குறித்த நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும். மேலும், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் நில மோசடி குறித்த விசாரணையை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

பழனி கோயில் நில முறைகேடு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் மேற்கொண்ட விசாரணை விவரங்களை வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.