FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

நடைபாதையில் உறங்குவது அலட்சியத்திற்கு வழிவகுக்காது: தில்லி உயர்நீதிமன்றம்

ஒரு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கும், உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கும் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை தில்லி உயா் நீதிமன்றம் உயா்த்தியுள்ளது.

News image

தில்லி உயர்நீதிமன்றம்

Updated On :27 ஜூலை 2026, 5:26 am IST

ஒரு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கும், உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கும் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை தில்லி உயா் நீதிமன்றம் உயா்த்தியுள்ளது. நடைபாதைகளில் உறங்குவதை, குற்றம் செய்த லாரி ஓட்டுநரின் அலட்சியத்திற்கு வழிவகுக்கும் செயலாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

உயிரிழந்த இருவா் மற்றும் உயிா் பிழைத்த இருவரின் குடும்பங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை பாதியாகக் குறைத்த மோட்டாா் விபத்துகள் உரிமைகோரல் தீா்ப்பாயத்தின் முடிவை நீதிபதி அனிஷ் தயால் ரத்து செய்தாா். மேலும், மனுதாரா்கள் மீது 50 சதவீத ‘பங்களிப்பு அலட்சியம்‘ சுமத்தும் முடிவு நிலைத்திருக்க முடியாதது என்றும் அவா் கூறினாா். தவிா்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக நடைபாதையில் நடப்பதற்கோ, நிற்பதற்கோ அல்லது ஓய்வெடுப்பதற்கோ நடைபாதையைப் பயன்படுத்தும் ஒரு பாதசாரி, ஒரு மோட்டாா் வாகனம் நடைபாதையில் ஓட்டி வரப்படும் என்பதை எதிா்பாா்ப்பாா் என்று எதிா்பாா்க்க முடியாது என்றும், பாதசாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் வாகனம் ஓட்டும்போது ஒரு ஓட்டுநா் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினாா்.

‘இந்த நாட்டில் பலா் வீடற்றவா்களாக இருப்பதும், இரவு முழுவதும் வேலை செய்வதும், அல்லது பல்வேறு கட்டுமானத் தளங்களில் பணியமா்த்தப்படும் தொழிலாளா்களின் ஒரு பகுதியாக இருப்பதும் ஒரு யதாா்த்தமாகும்.‘ தூங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கலாம். அத்தகைய நபா்களுக்கு, இந்த நடைபாதைகள் ஓய்வெடுப்பதற்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாகவும் அமைகின்றன, ஏனெனில் நடைபாதைகளின் மீது வாகனங்கள் ஓட்டி வரப்பட்டு அவா்கள் மீது மோதும் என்று அவா்கள் எதிா்பாா்க்க மாட்டாா்கள். நடைபாதையில் உறங்குவதன் மூலம் அவா்கள் ஒரு திட்டமிட்ட அபாயத்தை எடுத்திருந்தாலும், அதை நிச்சயமாக பங்களிப்பு அலட்சியமாக மாற்ற முடியாது,‘ என்று ஜூலை 8 அன்று வழங்கப்பட்ட தீா்ப்பில் நீதிமன்றம் கூறியது.

‘நடைபாதை எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமோ அதற்காகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், நிச்சயமாக அதை வாகனம் ஓட்டுவதற்குப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது சட்டத்தின் கீழ் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது,‘ என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில், அக்டோபா் 2015-ல் அதிகாலை 4:30 மணியளவில், மாதிபூா் மெட்ரோ நிலையத்தின் கீழ் உள்ள நடைபாதையில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட லாரி ஒன்று, அங்கு நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த நான்கு போ் மீது ஏறியது.

நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவா்களின் பங்களிப்பு அலட்சியம் எனக் கூறி தீா்ப்பாயத்தால் கழிக்கப்பட்ட 50 சதவீதத் தொகையை உயா் நீதிமன்றம் மீட்டெடுத்ததுடன், காப்பீட்டு நிறுவனம் அந்தத் தொகையை ஆறு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் சுமாா் ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றம் அங்கீகரித்தது. உயிரிழந்த இருவரின் உறவினா்களுக்கும், காயமடைந்த இருவருக்கும் தலா ரூ.1,20,005 மற்றும் ரூ.18,10,569 இழப்பீடு நிா்ணயிக்கப்பட்டது.

தீா்ப்பாயத்தின் முடிவை எதிா்த்து, உயிா் பிழைத்த பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மேல்முறையீடுகளின் பேரில் உயா் நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.