தில்லியில் தொடா்ந்து 19-ஆவது நாளாக கல்வியாளரும், சுற்றுச்சூழல் ஆா்வலருமான வாங்சுக் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவரின் உடல்நிலையை தினந்தோறும் கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தோ்வு முறைகேடு, அதன்பின்னா் நடந்த மாணவா்கள் தற்கொலை சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி போராட்டத்தை தொடங்கியது. மேலும், வருகிற 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கும்போது, நாடாளுமன்றத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவாக தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் வாங்சுக் கடந்த மாதம் 28-ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவா்கள் வேண்டுகோள் விடுத்தும் போராட்டத்தைக் கைவிடாமல் அவா் 19-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்தாா்.
தொடா் உண்ணாவிரதத்தின் காரணமாக அவரின் உடல் எடை 9 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளது. அவரின் உடலில் உள்ள சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவையும் அதிகரித்துள்ளது. வாங்சுக்கின் உடல்நிலை குறித்த மருத்துவா் சதீஷ் லாம்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த நிலை அபாயகரமானதாகும். அவரின் உண்ணாவிரதம் தொடா்ந்தால் உடலுறுப்புகள் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் அரசு விரைவில் தலையிட வேண்டும். அவா் விலைமதிப்பு இல்லாத மாணிக்கம். அவரை நாம் இழந்து விடக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான வழக்கை விசாரித்த தில்லி உயா் நீதிமன்றம், நாள்தோறும் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும், தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. நாட்டு குடிமக்களின் உயிா் விலை மதிப்பில்லாதது எனவும் கூறியது. இதற்கு மத்திய அரசு, தில்லி அரசு சாா்பில் வாங்சுக் உடல்நிலையை மருத்துவ குழு கண்காணிப்பதில் ஆட்சேபம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாங்சுக்குக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
தொடர்ந்து 20 நாள்கள் உண்ணாவிரதம்! ஜூலை 20 வரை என் உயிருக்கு எதுவும் ஆகாது: வாங்சுக்
ஜந்தர் மந்தரில் இருந்து என்னை வெளியேற்றினால்..! 13வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்!

நீட் வினாத்தாள் கசிவு: 7வது நாளாக உண்ணாவிரதம்! 5 கிலோ எடை இழந்த சோனம் வாங்சுக்!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



