
வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!
சீரமைக்கப்பட்ட வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
சென்னை வண்டலூா் பூங்காவில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா பெரிய அளவில் மறுசீரமைக்கப்பட்டு சனிக்கிழமை முதல் பார்வையாளர்களுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஓட்டேரி எரிக்கு அருகே 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சி பூங்கா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.
இப்பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு, 40 வகையான வண்ணத்துப் பூச்சி இனங்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், வண்ணத்துப்பூச்சி பூங்கா பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுடன் மறுசீரமக்கப்பட்டு வந்தது.
பணிகள் நிறைவடைந்து, தற்போது பூங்காவுக்குள் புதிய செடிகள் நடப்பட்டு உள்-அரங்கம் புதுப் பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.
இதனால் வண்ணத்துப் பூச்சிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் இப் பூங்காவை பார்வையிட ஏதுவாக சனிக்கிமை ஆகஸ்ட் 22 முதல் திறக்கப்படுகிறது என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.
தற்போது இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தகவல் மற்றும் விளக்க மையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது; இதனால், மக்கள் பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
இங்குள்ள புதிய காட்சி அமைப்புகள் மற்றும் சுய-கற்றல் வசதி கொண்ட 'கியோஸ்க்குகள்' (kiosks) மூலம், பார்வையாளர்கள் பல்வேறு பட்டாம்பூச்சி வகைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சிகளைப் புரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் சொந்த 'மெய்நிகர்' (virtual) பட்டாம்பூச்சிகளை வடிவமைக்கவும் கூட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றுச்சூழலில் பட்டாம்பூச்சிகள் மற்றும் சூழலியலில் அவற்றின் பங்கு குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொறு சனிக்கிழமையும் 11.30 மணிக்கு பட்டாம்பூச்சிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை மக்கள் கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






