
வீட்டுப்பாடம் எழுதாத 6 வயது சிறுவன்! ஆசிரியர் அடித்ததில் பலி?
ஆந்திர பிரதேசத்தில் வீட்டுப்பாடம் எழுதாத மாணவர், ஆசிரியர் அடித்ததில் பலியானது குறித்து...
ஆசிரியர் அடித்ததில் மாணவர் பலி - விடியோ க்ளிப்
ஆந்திர பிரதேசத்தில் வீட்டுப்பாடம் எழுதாத மாணவர், ஆசிரியர் அடித்ததில் நிகழ்விடத்திலேயே பலியானார்.
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தனியார் தொடக்கப் பள்ளியில் பிரணய் தேஜா (6) என்ற மாணவர் எல்கேஜி படித்து வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமையில் (ஆக. 20) பிரணய் தேஜா வீட்டுப்பாடம் எழுதாத காரணத்தின் அவரை வகுப்பாசிரியர் கண்டித்ததாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, மாணவரை ஆசிரியர் அடித்ததில் மாணவர் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மாணவரை அடிப்பதற்காக ஆசிரியர் முயலும்போது, மாணவர் அழுதுகொண்டே கத்துவதும், மாணவரின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்த சில நொடிகளிலேயே மாணவர் சரிந்து விழுவதும் விடியோவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், அவர் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
மேலும், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கேஜிஎச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, மாணவரின் உயிரிழப்பையடுத்து, மாணவர் படித்த பள்ளியை அவரது பெற்றோரும் உறவினர்களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையைத் தாக்கிய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், ஆசிரியரால் பயமுறுத்தப்பட்டதால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மாணவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மாணவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
LKG Boy Dies Of Heart Attack In Classroom After Being Beaten By Teacher
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






