ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

மேக்கேதாட்டு அணையால் தமிழ்நாட்டுக்கே அதிக பலன்: டி.கே. சிவகுமார்

மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்குத்தான் அதிக பலன் கிடைக்கும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியது குறித்து..

DK Shivakumar | Vijay

தமிழக முதல்வர் விஜய்யுடன் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - TN DIPR

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:52 pm IST

மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்குத்தான் அதிக பலன் கிடைக்கும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியுள்ளார்.

தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், பின்னர் செய்தியாளர்களுடன் பேசியதாவது, "தென் மண்டலக் குழுக் கூட்டம் சுமுகமாக முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. தொகுதி மறுவரையறை மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் தேவையில்லை என மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் கர்நாடகம் உள்பட தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா சார்பில் வலியுறுத்தினோம்.

பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவையைக் கருதியே மேக்கேதாட்டு அணை கட்டப்படுகிறது. மேக்கேதாட்டு அணையால் 5 டிஎம்சி குடிநீர் மட்டுமே கர்நாடகத்துக்கு. மீதமுள்ள அனைத்தும் தமிழ்நாட்டுக்குத்தான்.

தமிழ்நாட்டுக்காகவே மேக்கேதாட்டு அணை கட்டப்படுகிறது, இது கர்நாடகத்துக்கானது அல்ல. இந்த அணையால் கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக பலன் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

Summary

Mekedatu dam will benefit Tamil Nadu farmers too, says Karnataka CM Shivakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.