FOLLOW US

ON GOOGLE DISCOVER

மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
/

மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப் பிறகு கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டி....

News image

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப்படம்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 4:45 pm IST

காவிரி விவகாரத்தில் மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப் பிறகு பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "காவிரி விவகாரத்தில் மேக்கேதாட்டு திட்டமே நிரந்தர தீர்வாகும். உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தன் தீர்ப்பை வழங்கிவிட்டது,

மத்திய அரசும் தன் பதிலை அளித்துள்ளது. அனைத்தையும் கருத்தில் கொண்டு, இனிமேலும் நேரத்தை வீணடிக்காமல் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இது தமிழ்நாட்டிற்கு அதிகமாகவோ அல்லது கர்நாடகத்திற்கு குறைவாகவோ கிடைப்பதைப் பற்றிய விஷயம் அல்ல.

கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, கலந்துரையாடி இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க நாம் இந்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும். இந்த முயற்சியில் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், பெங்களூரு வரவிருந்த திட்டத்தை ஒத்திவைக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன், அவரும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். மேக்கேதாட்டு அணையின் திட்ட அறிக்கையை மாற்ற முடிவு செய்துள்ளோம்.

திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். நேரத்தை வீணாக்காமல் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதே நிரந்தர தீர்வு என்று தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

On Cauvery water issue, Karnataka CM DK Shivakumar says, The Mekedatu project is the permanent solution.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.