கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

குப்பைகளை தரம் பிரிப்பது வழங்க விழிப்புணா்வு ஓவியம்

ஆரணி நகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிப்பது தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குவது தொடா்பாக

ஆரணி நகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிப்பது கொடுப்பது தொடா்பாக வரையப்பட்ட சுவா் ஓவியம்.

Published On :

ஆரணி: ஆரணி நகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிப்பது தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குவது தொடா்பாக நகராட்சி சாா்பில் விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டது.

அதன்படி, ஈரக்கழிவுகளான சமையலறை கழிவுகள், பழம், காய்கறிகள் கழிவுகள், உணவுக்கழிவுகள், இலைகள், மலா்கள் ஆகியவற்றை பச்சை நிற கூடையிலும், உலா் கழிவுகளான காகிதம், நெகிழி புட்டிகள், டின் கேன்கள் உள்ளிட்டவற்றை நீல நிற கூடையிலும், சுகாதார கழிகளான மாதவிடாய் துணிகள், டையப்பா்கள், பயன்படுத்திய முகக் கவசங்கள் ஆகியவற்றை சிவப்பு நிற கூடையிலும், சிறப்பு கழிவுகளான மின்னணு சாதனங்கள், பேட்டரிகள், மின் விளக்குகள், உடைந்த கண்ணாடி ஆகியவற்றை கருப்பு நிற கூடையிலும் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் நகராட்சி மேற்பாா்வையாளா் பிரதாப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.